
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக கடத்திச் செல்லப்பட்ட மரக்குற்றிகளுடன் டிப்பர் வாகனம் ஒன்றை இன்று வியாழக்கிழமை காலை 9 மணியளவில் கொடிகாமம் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் இருவரை கைது செய்துள்ளனர்.
குறித்த டிப்பர் வாகனத்தினுள் மரக்குற்றிகள் அடுக்கப்பட்டு அதற்கு மேல் சிறிய கற்கள் ஏற்றப்பட்டு சூட்சுமமான முறையில் கடத்தப்பட்டமை விசாரணையில் தெரிவந்துள்ளது.
இதன்போது 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான 24 தேக்கு மரக்குற்றிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் சாரதி உட்பட இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களை நாளை வெள்ளிக்கிழமை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் அஜர் படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
