ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தீர்த்தோற்சவம்

கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று ஞாயிற்று கிழமை பகல் சிறப்பாக நடைபெற்றது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றினை ஒருங்கே கொண்ட இந்த ஆலயத்தின் மஹோற்சவமானது கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமான நிலையில் இன்று தீர்த்தோற்சவ இடம்பெற்று நிறைவடைந்தது.

இன்று காலை  பஞ்சமுக விநாயகருக்கு வசந்த மண்டபத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று, பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ மாமாங்கேஸ்வர பெருமான் வரலாற்று சிறப்பு மிக்க  தீர்த்தத்தில் தீர்த்தமாடினார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்