
எனது செயலாளர் யாரிடமும் பணம் வாங்கவுமில்லை, யாருக்கும் பணம் கொடுக்கவுமில்லை, என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் செயலாளர் உட்பட இருவர் இலஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற குறித்த கைது சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பு, இன்று வெள்ளிக்கிழமை காலை மட்டு ஊடக அமையத்தில் இடமபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,
“அண்ண எப்ப சாகுவார். திண்ண எப்ப காலியாகும் ” என்று நினைக்கும் கீழ்த்தரமான அரசியல்வாதிகளின் சில ஆதரவாளர்கள், இந்த சந்தர்ப்பத்தை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி, சமூக வலைத்தளங்களில் பேசுவதையும், எழுதுவதையும் பார்க்கின்றேன்.
இதற்கு எல்லாம் ஒருபோதும் நாம் அஞ்சப்போவதும் இல்லை, அப்படியான பொய்யான செய்திகளை பரப்பியவர்களுக்கு சட்டப்படி நான் நடவடிக்கைகளை மேற்கொள்வேன், என தெரிவித்தார்.
மேலும் அவர் கீழ்கண்டவாறு தெரிவித்தார்,
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
