திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி ஆலய வேட்டைத்திருவிழா

-திருக்கோவில் நிருபர்-

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் பண்டைய நாகரிகமும் பண்டைய வரலாறும் மிக்க தமிழ் பேசும் மக்கள் வாழும் பழம்பெரும் கிராமமான திருக்கோவிலில் சித்திரவேலனின் திருவேட்டைத்திருவிழா நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

மாலை 03:00 மணிக்கு திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி திருக்கோவில் சகலகலை அம்மன் ஆலயம் வரை வெகு விமர்சையாக சென்றடைந்தது.

இவ் வேட்டைத்திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து கொண்டதோடு பல கலை நிகழ்வுகளும் வீதியில் இடம்பெற்றது.

இவ் நிகழ்வில் திருக்கோவில் சேவற்கொடியோன் அமைப்பினரால் இறைத்தொண்டுகள் இடம்பெற்றதோடு தாகசாந்தி நிகழ்வினையும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

அவற்றைத்தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான பக்த அடியார்கள் புடை சூழ முருகப்பெருமான் ஆலயத்தை வந்தடைந்தார்.

அத்துடன் வேட்டைத்திருவிழா இனிதே நிறைவுற்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்