
நேபாளத்தில் வெடித்துச் சிதறிய விமானம்: 18 பேர் பலி
நேபாள தலைநகர் காத்மண்டுவில் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் பலர் பலியானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பணியாளர்கள் உட்பட 19 பயணிகளுடன், இன்று புதன்கிழமை காலை 11 மணியளவில் நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் போது விமானம் விபத்துக்குள்ளானது.
விமானம் புறப்படும் போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறினால் விமானம் வெடித்துச் சிதறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் இதுவரையில் 18 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
