
பங்களாதேசில் தொடரும் பதற்ற நிலை : 17 பேர் உயிரிழப்பு!
பங்களாதேசில் சுதந்திர போராட்ட வீரர்களின் குடும்பத்தவர்களிற்கு அரசாங்க வேலை வாய்ப்பு வழங்கும் ஒதுக்கீட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி நேற்று வியாழக்கிழமை மாணவர்களிற்கும் ஆளும் கட்சியின் ஆதரவாளர்களிற்கும் இடையில் இடம்பெற்ற மோதல்கள் காரணமாக17 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் 100க்கும் அதிகமான மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் தலைநகர் டாக்காவில் உள்ள அரசதொலைக்காட்சி தலைமையலுவலகத்திற்கு தீ வைத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
