மழைக்காலத்தில் பாதங்களைப் பாதுகாக்க வழிகள்

மழைக்காலத்தில் பாதங்களைப் பாதுகாக்க வழிகள்

மழைக்காலத்தில் பாதங்களைப் பாதுகாக்க வழிகள்

🟦மழைக்காலத்தில் சாலைகளில் சேறும் சகதியுமாக இருக்கும். இதனை தவிர்க்க முடியாது. இதனால் நம் கால்கள் தொற்று மற்றும் ஒவ்வாமைக்கு ஆளாகின்றன. கால்கள் உடலின் மிக முக்கியமான பகுதியாகும், எனவே அவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

🟦மழைக்காலத்தில் கால் விரல் இடுக்குகளில் உண்டாகும் மிக முக்கியப் பிரச்னையாக இந்த சேற்றுப் புண்களைக் கூறலாம். மழைக்காலம் மட்டுமல்ல. எப்போதும் ஈரத்திலேயே புழங்குபவர்களுக்கும் சேற்றுப் புண்கள் உண்டாகலாம். அத்துடன் பித்த வெடிப்பு, கால் ஆணி, நகச்சுற்று ஆகிய தொற்றுகளும் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. அதனால் மழைக்காலத்தில் பாதங்களை எளிமையாக பராமரிக்க சில வீட்டு வைத்திய குறிப்புகள் பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

🔶மஞ்சள் ஒரு பாக்டீரியா எதிர்ப்பு பண்பை கொண்டது, பூஞ்சை காளான் மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகளின் அடிப்படையில் மஞ்சள் மிகவும் முக்கியமானது. பூஞ்சை தொற்றுகளிலிருந்து விடுபட மஞ்சள் திறம்பட பயன்படுத்தப்படுகிறது. மேற்கூறிய முறைப்படி மஞ்சளை நீரில் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, காய்ந்ததும் கழுவ வேண்டும். விரைவில் நல்ல பலனைக் காணலாம்.

🔶நீங்கள் கால்விரல்களுக்கு இடையில் சிறிது வேப்பம் சாற்றை அப்ளை செய்து மசாஜ் செய்யலாம். இந்த முறை அரிப்பு, வெடிப்பை சரிச்செய்யும்.. விளையாட்டு வீரரின் கால் பிரச்சனை முக்கியமாக கால்விரல்களுக்கு இடையில் உள்ள பூஞ்சையை சரிச்செய்யும். முக்கியமாக காலணிகளை அதிகம் அணிபவர்களுக்கு வியர்வை மற்றும் அழுக்கு காரணமாக இந்த பூஞ்சை எழுகிறது. இந்த பிரச்சனையை குறைக்க வேப்பம் இலை பயனுள்ளதாக இருக்கும்.

🔶எந்நேரமும் தண்ணீரிலியே புழங்கும் பெரும்பாலான மக்களின் கால் விரல் இடுக்குகளில், ஒரு வகையான பூஞ்சைத் தொற்று காரணமாக வெள்ளை நிறத்தில் அரிப்புடனும் எரிச்சலுடனும், கடுமையான வலி தோன்றும்.. அப்போது உங்கள் விரல்களுக்கு இடையே உள்ள புண்களில் மருதாணியை தடவி, அது முற்றிலும் காய்ந்து போகும் வரை விட்டு, குளிர்ந்த நீரில் கழுவி விடவும்.. பின்னர் அதனை ஒரு காட்டன் துண்டுக் கொண்டு உலர வைக்கவும். இது நல்ல பலனைத் தரும்.

🔶எலுமிச்சை சாறு மற்றும் வினிகர் கலவையை உங்கள் கால்களில் உள்ள அரிப்பு உள்ள இடங்களில் தடவுவது நல்லது.

🔶புதினாவை இயற்கையான டியோடரண்டாகப் பயன்படுத்தலாம். மேலும், இது நல்ல கிருமி நாசினி, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. எனவே இந்த மழைக்காலத்தில், புதினா அடிப்படையிலான கிரீம்கள், ஃபேஸ் வாஷ்கள் அல்லது ஸ்க்ரப்களைப் பயன்படுத்துவது நல்லது.

🔶பாதிக்கப்பட்ட பகுதியை இறுக்கமான ஆடை அல்லது கட்டுகளால் மூட வேண்டாம்.. நல்ல காற்றோட்டமாக வைத்திருப்பது நல்லது.. உங்கள் கால்களை வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்து கழுவி விட்டு அதில் பூஞ்சை தொற்றுகளைத் தடுக்க தேங்காய் எண்ணெயை அப்ளை செய்து வந்தால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

மழைக்காலத்தில் பாதங்களைப் பாதுகாக்க வழிகள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்