
அக்குறணை நகருக்கு அருகில் பேக்கரி பொருட்கள் விற்பனை நிலையம் அமைந்துள்ள மூன்று மாடி கட்டடம் ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை காலை தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அந்த கட்டடம் முற்றாக தீக்கிரையாகியுள்ளது.
இந்த தீ பரவல் காரணமாக கண்டி – மாத்தளை ஏ-9 வீதியை தற்காலிகமாக மூடுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை, தலவாக்கலை – பெயார்பீல்ட் தோட்டத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு தீ பரவல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அந்த தோட்டத்தின் முதலாம் இலக்க நெடுங்குடியிருப்பின் 5 வீடுகள் இந்த தீ பரவலால் பாதிக்கப்பட்டன.
தீ பரவல் சம்பவத்தால் நிர்க்கதியான 5 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேர், உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
