
பௌதீக வளங்களுக்கும், மக்களுக்கும் தீங்கு விளைவிக்கும் எந்த திட்டத்திற்கும் நான் அனுமதி வழங்கமாட்டேன் என சுற்றாடல்துறை இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டபின், ஊடகவியலாளர்கள் வாகரை இல்மனைட் அகழ்வு தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
