
இடிந்து விழுந்த விமான நிலையத்தின் முகப்பு கூரை: ஒருவர் பலி
டெல்லி சர்வதேச விமான நிலையத்தின் முகப்பு கூரையின் ஒரு பகுதி நேற்று வியாழக்கிழமை இடிந்து வீழ்ந்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிர் இழந்ததாக சர்வதேச செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்து ஏற்பட்டுள் நுளைவாயில் பகுதி பாதுகாப்பிற்காக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இதேவேளை சீரற்ற கால நிலைகாரணமாக நேற்று பெய்த கடும் மழை காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் குறித்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
