மட்டக்களப்பு காத்தான்குடியில் குழப்பநிலை : இருவர் கைது!

மட்டக்களப்பு காத்தான்குடியில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 31 ஆவது பேராளர் மாநாட்டில் குழப்ப விளைவிக்க முயன்ற இருவரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் 31 ஆவது பேராளர் மாநாடு இன்று சனிக்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமின் தலைமையில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.

இன் நிகழ்வில் இலங்கையில் உள்ள அனைத்து பாகங்களிலும் இருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் வருகை தந்தனர்.

இதன் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் 31 ஆவது பேராளர் மாநாட்டில் சம்மாந்துறையில் இருந்து வருகை தந்த ஒர் அணியினருக்கும் இன்னும் ஓர் அணியினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்தில் பரபரப்பான நிலைமை ஏற்பட்டது.

இந்நிலையில் கைலப்பில் ஈடுபட்ட இருவரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்