மட்டக்களப்பில் “கரும்பலகை” நாவல் வெளியீட்டு நிகழ்வு

மகுடம் கலை இலக்கிய வட்டம் நடாத்தும் ‘கரும்பலகை’ நாவல் வெளியீட்டு நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் மட்டக்களப்பு எல்லை வீதியில் அமைந்துள்ள வை எம் சீ ஏ மண்டபத்தில் இடம்பெற்றது.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் அருட்பணி ஏ.ஏ.நவரட்ணம் அடிகள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு, பிரதம அதிதியாக மட்டக்களப்பு தமிழ்ச்சங்கத்தின் தலைவர் சைவப்புரவலர் வி.றஞ்சிதமூர்த்தி,  சிறப்பு விருந்தினராக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்

நாவல் அறிமுகத்தை, இலக்கிய விமர்சகர் இரா சிவலிங்கம் வழங்கியிருந்ததுடன்,  கவிஞர் அழகுதனு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார்

மேலும், நாவலின் முதற்பிரதியை தேசிய சேமிப்பு வங்கியின் மட்டக்களப்பு கிளை முன்னாள் முகாமையாளர் எஸ் வி சுவேந்திரன் மற்றும் இலங்கை வங்கி மட்டக்களப்பு கிளையின் முன்னாள் உதவி முகாமையாளர் மூ ஜெயரஞ்சன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்