யானை தாக்கியதில் 26 வயது இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

-கிண்ணியா நிருபர்-

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வான்எல சுண்டியாற்று பகுதியில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி நேற்று வெள்ளிக்கிழமை ஒருவர் உயிர் இழந்துள்ளார்.

இவ்வாறு உயிர் இழந்தவர் கிண்ணியா இடிமனை சேர்ந்த இளம் குடும்பஸ்தரான அப்துல் சத்தார் முகம்மது அயாஸ் (வயது 26) என்பவர் ஆவார்.

குறித்த இளம் குடும்பஸ்தர் தனது தந்தையுடைய பண்ணைக்கு சென்ற வேளையில் யானை தாக்கியுள்ளது

உயிரிழந்தவரின் சடலம் பிரேத ப‌ரிசோதனை‌க்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

இப்பகுதியில் இரண்டு வாரத்துக்குள் நான்கு பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்