
பசுவைப் பற்றி பத்து வரிகள்
- நேபாளம் நாட்டில் பசுவை அந்த நாட்டின் தேசிய விலங்காக அறிவித்துள்ளனர்.
- ஒரு பசு முதல் கன்று பிரசவித்ததும், அதை தேனு என்பார்கள். இரண்டாவது கன்று பிரசவித்ததும் அதற்கு “கோ” என்றழைப்பார்கள். எனவே இரண்டாவது கன்று பிரசவித்த பசுவைத்தான் கோ பூஜைக்கு பயன்படுத்துவார்கள்.
- பசுவுக்கு தினமும் பூஜை செய்வது என்பது பராசக்திக்கு பூஜை செய்வதற்கு சமமாகும்.
- பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும், அஷ்ட வசுக்களும், நவக்கிரகங்களும் ஆட்சி செய்கின்றனர்.
- பசுக்களை அடிக்கடி நீர் நிலைகளில் நீந்தி குளிக்க வைப்பது நல்லது.
- பசுவானது பால் கறக்கும் நிலையில் இருக்கும் போது தானம் செய்வதுதான் மிக சிறந்த தானமாகும். பால் கறக்கும் பாத்திரமும் கொடுப்பது இன்னும் சிறப்பானது.
- பசுவை மாடு என்று அழைக்காமல் பசுத்தாய், கோமாதா என்று அழைத்தால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும்.
- வீட்டில் பசு இல்லாதவர்கள் அன்றாடம் ஒரு வேளையாவது ஏதாவது பசுவிற்கு ஒருபிடி அறுகம் புல்லோ, வாழைப்பழமோ, அகத்திக் கீரையோ, பிறதீவனமோ கொடுக்க வேண்டும்.
- கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கறுப்பு நிற பசுவை தானம் செய்தால் பரிகாரம் உண்டாகும்.
- ஒரு காரியம் வெற்றி அடைய வேண்டும் என்று விரும்புகிறீர்களாப அதற்காக கோ தானம் செய்து பாருங்கள். நிச்சயம் வெற்றி உண்டாகும்.
பசுவைப் பற்றி பத்து வரிகள்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்