மக்களின் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்ய முடிந்தாலும் நாடு இன்னும் பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபடவில்லை
அரசியலை ஒதுக்கிவிட்டு நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் வேலைத் திட்டத்திற்கு ஆதரவளிப்பது அனைவரினதும் பொறுப்பாகும், என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ருவன்வெல்ல பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியுடன் நாட்டின் அரசியலும் வீழ்ச்சியடைந்துள்ளது, முதன்முறையாக அரசியலில்லாத அரசாங்கம் உருவாக்கப்பட்டது.
தற்போது மக்களின் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்ய முடிந்தாலும், நாடு இன்னும் பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபடவில்லை.
எனவே அரசியலுக்கு அப்பாற்பட்டு நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்