அதிவேக நெடுஞ்சாலை மீண்டும் திறப்பு

வெள்ளம் காரணமாக முழுமையாக மூடப்பட்ட அதிவேக நெடுஞ்சாலையின் கடுவலை வெளியேறும் மற்றும் உள்நுழையும் பகுதி இன்று புதன் கிழமை காலை முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த வீதியூடாக வழமை போன்று பயணிக்க முடியும் என வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.

கடுவலை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக குறித்த வீதியூடான போக்குவரத்து பாதிப்படைந்திருந்தது.

எனினும் வெள்ள நீர் குறைவடைந்தமையை அடுத்து மீண்டும் குறித்த வீதியை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்