நிதி இராஜாங்க அமைச்சருடனான கலந்துரையாடல் தோல்வி: இலங்கை ஆசிரியர் சங்கம்

அதிபர் – ஆசிரியர்களின் வேதன பிரச்சினை தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவுடன் நேற்று செவ்வாய் கிழமை இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனை தெரிவித்தார்.

இதற்கமைய, எதிர்வரும் 12ஆம் திகதியும் 26ஆம் திகதியும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்த ஆண்டு பாதீட்டு திட்டத்தின் ஊடாக அரச பணியாளர்களின் வேதன பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அதிபர் – ஆசிரியர்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் வேதன அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என இன்றைய சந்திப்பின் போது வலியுறுத்தப்பட்டதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்