மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு
மட்டக்களப்பு இந்துக்கல்லூரி பாடசாலையில் இன்று புதன் கிழமை கணிதம், விஞ்ஞானம், பொறியியல் தொழில்நுட்பம், விஞ்ஞான தொழில் நுட்பம், கலை, வர்த்தக பிரிவுகளில் உயர்தர பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது சிறந்த பெறுபேறுகளை பெற்று பல்கலைகழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பாக மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டததோடு மாவட்ட ரீதியாக கணித பிரிவில் முதலாம் இடத்தினையும் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தினையும் பெற்ற மாணவனுக்கு காசோலையும் வழங்கி வைக்கப்பட்டது.
இதேவேளை இதன் தொடர்ச்சியாக பாடசாலையில் இடம்பெறவிருக்கும் பரிசளிப்பு விழாவிலும் இம்மாணவர்கள் கௌரவிக்கப்படவுள்ளதாக பாடசாலை அதிபர் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் வலையக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், வங்கி உத்தியோகஸ்தர்கள், பாடசாலையின் பழைய மாணவர்கள், அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்