மகளை கைது செய்யச் சென்ற பொலிஸாருக்கு இடையூறு விளைவித்த தாயார் கைது

வர்த்தகர்களுக்குப் போலி காசோலைகளை வழங்கியதாகக் கூறப்படும் பெண் ஒருவரைக் கைது செய்யச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடையூறு விளைவித்த தாயார் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பாறை பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தல், சந்தேக நபருக்குத் தப்பிச் செல்ல உதவி செய்தல், பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களின் சீருடைகளை சேதப்படுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேக நபரின் தாயார் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, இவர் அம்பாறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஒரு இலட்சம் ரூபா இரண்டு சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், இந்த சம்பவத்தின் போது சந்தேக நபரான பெண் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்