சீரற்ற வானிலை: பலியானோர் எண்ணிக்கை உயர்வு
கடந்த முதலாம் திகதி தொடக்கம் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் வரையான காலப்பகுதியில் நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட பல்வேறு அனர்த்தங்களில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை மாவட்டத்தில் 6 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 5 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 3 பேரும், காலி மாவட்டத்தில் 2 பேரும், கம்பஹா மாவட்டத்தில் ஒரு மரணமும் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி 8 மாவட்டங்களில் 21,353 குடும்பங்களைச் சேர்ந்த 84,749 பேர் மோசமான காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் கூறியுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்