இந்திய மக்களவைத் தேர்தல் முடிவுகள் இன்று
இந்திய மக்களவைத் தேர்தல் முடிவுகள் இன்று செவ்வாய் கிழமை வெளியிடப்படவுள்ளன.
இந்திய மக்களவைத் தேர்தலின் வாக்குப்பதிவுகள் கடந்த 6 வாரங்களில், 7 கட்டங்களாக இடம்பெற்றன.
இதற்கமைய உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் 18ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிகள் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகின.
தற்போதைய ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சியே 3ஆவது முறையாகவும் அரசாங்கத்தை அமைக்கும் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
மொத்தமாகவுள்ள 543 தொகுதிகளில், குஜராத்தின் சூரத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மீதமாகவுள்ள 542 தொகுதிகளுக்கான முடிவுகள் இன்றைய தினம் வெளியிடப்படவுள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்