இணையவழியில் 300 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் துஷ்பிரயோகம்
ஒவ்வொரு ஆண்டும் 300 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் இணையவழியாக பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டலுக்கு பலியாகின்றனர் என புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.
எடின்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான ஆய்வில், உலகளவில் எட்டு குழந்தைகளில் ஒருவர், அதாவது 12.6வீதம், கடந்த ஆண்டில் பாலியல் படங்கள் மற்றும் வீடியோக்கள், அரட்டைகள் மற்றும் நிர்வாணப் படங்களைப் பகிர்தல் ஆகியவற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்த தரவுகளின்படி, உலகில் 302 மில்லியன் இளைஞர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.
கூடுதலாக, உலகளவில் 12.5வீதம் குழந்தைகள் அல்லது 300 மில்லியன் குழந்தைகள் பாலியல் கோரிக்கைகள் உட்பட தேவையற்ற பாலியல் உள்ளடக்கம் கொண்ட இணைப்புகளை அணுகியுள்ளனர்.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் குழந்தைகளின் புகைப்படங்களை ஆன்லைனில் வெளியிடாமல் இருக்க பாதிக்கப்பட்டவர்களிடம் பணம் கேட்ட பல சம்பவங்கள் நடந்துள்ளதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்