வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போன இருவர் சடலங்களாக மீட்பு
காலி, தவலம பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டுக் காணாமல் போயிருந்த இரண்டு நபர்களும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
23 மற்றும் 53 வயதுடைய இரண்டு நபர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சீரற்ற காலநிலை காரணமாக தவலம பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் போது இவர்கள் இருவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுக் காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்