மரங்களை வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடுவதற்கான பயிற்சி
இந்தியாவில் மரங்களை வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடுவதற்கு வனத்துறை அதிகாரிகளுக்கு க்ரீன் கேர் தனியார் அமைப்பினர் பயிற்சி அளித்துள்ளனர்.
சாலை விரிவாக்க பணிக்காக மரங்களை வெட்டாமல், வேரோடு பிடுங்கி மற்றொரு இடத்தில் எவ்வாறு நட வேண்டுமென வனத்துறை அதிகாரிகளுக்கு தனியார் அமைப்பு பயிற்சியளித்துள்ளது.
இதன்போது கோவையைச் சேர்ந்த க்ரீன் கேர் அமைப்பினர் 500 மரங்களை சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் சாலை விரிவாக்கத்திற்காக வெட்ட இருந்த மரத்தை வேருடன் அகற்றி செம்மஞ்சேரியில் பூங்காவில் நட்டு வைத்து செயல் விளக்கம் அளித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்