மட்டக்களப்பில் நேற்றையதினம் வீசிய பலத்த காற்று

-வெல்லாவெளி நிருபர்-

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுகிழமை மாலை பலத்த காற்று வீசியுள்ளது.

நேற்றைய தினம் வீசிய பலத்த காற்றின் காரணமாக உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றாலும் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்துள்ளது.

இதேவேளை நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளது. எனினும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாலைவேளைகளில் பலத்த காற்று வீசி வருகின்ற அதேவேளை ஒரு சில பகுதிகளில் மாத்திரம் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்து வருகின்றமை குறிப்பிடதக்கது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்