புதிய பட்டதாரி ஆசிரியர்கள் நாளை தமது கடமைகளை பொறுப்பேற்க முடியும்

-யாழ் நிருபர்-

புதிய பட்டதாரி ஆசிரியர்கள் நாளை செவ்வாய் கிழமை தமது கடமைகளை பொறுப்பேற்க முடியும்

வடக்கு மாகாணத்தில் அண்மையில் நியமனம் பெற்றுக்கொண்ட 374 பட்டதாரி ஆசிரியர்களும் நாளை செவ்வாய் கிழமை தமது கடமைகளை பொறுப்பேற்க முடியும் என மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிறஞ்சன் அறிவித்துள்ளார்.

புதிய ஆசிரியர்கள் இன்று தினம் திங்கட்கிழமை கடமைகளை பொறுப்பேற்க வேண்டும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்இ இன்று நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

ஆகவே நாளை பாடசாலை தினத்தில் புதிய பட்டதாரி ஆசிரியர்கள் தங்களுக்கு பணிக்கப்பட்டுள்ள பாடசாலைகளுக்கு சென்று கடமைகளை பொறுப்பேற்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்