கந்தளாய் நகரில் ஐக்கிய மக்கள் சக்தியின் விவசாய சம்மேளனக் கூட்டம்

-மூதூர் நிருபர்-

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜீத் பிரேமதாஷ தலைமையில் கந்தளாய் நகரில் ஐக்கிய மக்கள் சக்தியின் விவசாய சம்மேளனக் கூட்டம் பெருந்திரளான மக்களின் பங்களிப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான நளின் பண்டார, எரான் விக்ரமநாயக்க, கிங்க்ஸ் நெல்சன், ரோஹன பண்டார, ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர்கள், செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்