தேசிய சுற்றுச் சூழல் வாரத்தினை முன்னிட்டு விநாயகபுரம் பகுதியில் சிரமதானம்
-தம்பிலுவில் நிருபர்-
தேசிய சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச விநாயகபுரம் பகுதியில் சிரமதான நிகழ்வு நேற்று முன் தினம் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
இந் நிகழ்வானது திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர்.பி.மோனகாந்தன் தலைமையில் இடம்பெற்றது.
மேலும் இந் நிகழ்வில் திருக்கோவில் பொதுசுகாதார வைத்திய அதிகாரி காரியாலய உத்தியோத்தர் பொதுமக்கள் என பலரும் இவ் நிகழ்வில் கலந்து கொண்டு இவ் சிரமதானப்பணியினை முன்னெடுத்துடன் இவ் சிரமதான பணியில் மீட்கப்பட்ட கழிவுப்பொருட்களை திருக்கோவில் பிரதேச சபையின் உழவு இயத்திர உதவியுடம் அங்கிருந்து அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்