ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு கோரி துண்டுப் பிரசுரங்கள்
-யாழ் நிருபர்-
ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று சனிக்கிழமை மாலை மூன்று மணியளவில் துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
ஸ்ரீலங்காவின் ஒற்றையாட்சி அரசியலமைப்பு நீக்கப்பட்டு சமஸ்டி அரசியலமைப்பு உருவாக்கப்படுவதற்கான உத்தரவாதம் வழங்கப்படும் வரை ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிப்போம் என்ற தொனி பொருளில் மக்களிடையே துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், கட்சியின் ஊடக பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ், முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்