காட்டு யானைகள் அட்டகாசம்

-மூதூர் நிருபர்-

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சந்தனவெட்டை கிராமத்திற்குள் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள் சேதம் விளைவித்துள்ளன.

இதன்போது பயன்தரும் தென்னை,வாழை மரங்களை காட்டு யானைகள் சேதப்படுத்திச் சென்றுள்ளன.

பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் செய்கை பண்ணும் பயிர்களை காட்டு யானைகள் தொடர்ந்தும் சேதப்படுத்துவதால், இவ் விடயத்தில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு யானை பாதுகாப்பு வேலி அமைத்துத்தர முன்வர வேண்டுமென மூதூர்  சந்தனவெட்டை கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்