டைட்டானிக் கப்பலின் சிதைவுகளைப் பார்ப்பதற்கு கடலுக்குள் செல்லும் அமெரிக்க வர்த்தகர்
உலகப் புகழ் பெற்ற டைட்டானிக் கப்பலின் சிதைவுகளைப் பார்ப்பதற்கு அமெரிக்காவின் வர்த்தகர் ஒருவர் கடலுக்குள் செல்லத் தயாராவதாக தெரிவிக்கப்படுகின்றது.
டைட்டானிக் கப்பலின் சிதைவுகளைப் பார்ப்பதற்கு பிரித்தானிய வர்த்தகர் ஒருவர் உட்பட 5 பேர் கடந்த வருடம் கடலுக்குள் சென்றனர்.
நீர்மூழ்கிக் கப்பல் மூலம் கடலுக்குள் சென்ற ஐவரும் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், அமெரிக்காவின் வர்த்தகர் ஒருவர் டைட்டானிக் கப்பலின் சிதைவுகளைப் பார்க்கச் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர் தனது உதவியாளருடன் கடலுக்குள் செல்லவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
டைட்டானிக் கப்பலின் சிதைவுகளை டைட்டானிக் திரைப்பட இயக்குநர், கடலுக்குள் சென்று 30ற்கும் அதிகமான முறை பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்