சட்டவிரோத மதுபானத்தை அருந்திய நால்வர் பலி
தம்புள்ளை – விஹாரை சந்தியில் சட்டவிரோத மதுபானத்தை அருந்திய நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
சட்டவிரோத மதுபானத்தை அருந்திய இரண்டு பேர் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னதாக உயிரிழந்ததாகவும் அத்துடன் நேற்றைய தினம் புதன் கிழமையும் இரண்டு பேர் உயிரிழந்ததாக அந்த பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதுடன் தடயவியல் அறிக்கையும் பெறப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் உயிரிழப்பிற்கான காரணத்தைக் கண்டறிய முடியும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்