உலகம் முழுவதும் ஸ்டார்லிங்க் இணையச் சேவை முடக்கம்

உலகம் முழுவதும் இன்று புதன் கிழமை ஸ்டார்லிங்க் இணைய சேவை முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, உலகம் முழுவதும் சுமார் 41,393 ஸ்டார்லிங்க் இணைய இணைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், ஸ்டார்லிங்க் இணையச் சேவை தற்போது முழுமையாக மீட்டமைக்கப்பட்டுள்ளதாக, ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்