ரயில் முன் பாய்ந்த நபர் வைத்தியசாலையில் அனுமதி
-பதுளை நிருபர்-
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் பாய்ந்து நபர் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முற்பட்டதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்
இச்சம்பவம் இன்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெமோதர ரயில் நிலையத்துக்கு அருகாமையில் உள்ள சுரங்க பாதைக்கு அருகாமையிலையே குறித்த நபர் தற்கொலை செய்து கொள்ள முற்பட்டதாகவும், இதனால் குறித்த நபர் படுகாயம் அடைந்த நிலையில் 1990 நோயாளர் காவு வண்டியில் தெமோதர வைத்திருக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு இருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்
இவ்வாறு தற்கொலைக்கு முயன்றவர் உடுவர தோட்டம் 4 ம் பிரிவை சேர்ந்த 34 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்தனர்
மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்