நாளை மற்றும் நாளை மறுதினம் பாடசாலை நடைபெறுமா?
நாளை மற்றும் நாளை மறுதினங்களில் அனைத்து பாடசாலைகளிலும் வழமை போன்று கல்விச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை வியாழக்கிழமையும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமையும் வழமை போன்று நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இயங்கும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் ஆசிரியர் சங்கங்களால் முன்னெடுக்கப்படவுள்ள பணிப்பகிஷ்கரிப்புக்கு மத்தியில் பாடசாலைகள் இயங்காது என தெரிவிக்ககப்பட்ட நிலையிலேயே கல்வி அமைச்சு இந்த செய்தியை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்