பேருந்து விபத்து: 27 பேர் காயம்

கொழும்பு – பதுளை பிரதான வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 27 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எம்பிலிப்பிட்டியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்தின் போது 27 பேர் காயமடைந்து இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்