திரைப்பட இயக்குநர் சூர்யபிரகாஷ் காலமானார்
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் சூர்யபிரகாஷ் தனது 55ஆவது வயதில் நேற்று திங்கட்கிழமை காலமானார்.
இயக்குநர் சூர்யபிரகாஷ் மாரடைப்பால் காலமானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சரத்குமார் நடிப்பில் வெளியான மாயி, திவான் போன்ற படங்களை சூர்யபிரகாஷ் இயக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் சூர்யபிரகாஷின் மறைவுக்கு சினிமா பிரபலங்கள், இரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்