மட்டக்களப்பில் கிணற்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு
மட்டக்களப்பில் இன்று திங்கட்கிழமை கிணற்றிலிருந்து ஆணொருவரின் சடலம் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது.
வெல்லாவளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் பகுதியில் உள்ள – வயற்பகுதியில் காணப்படும் கிணறொன்றில் இருந்தே இவ்வாறு சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மண்டூர் பகுதியை சேர்ந்த 59 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதேவேளை சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற நீதிபதி பார்வையிட்டதன் பின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்