தன்சல் வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற சர்வமதத் தலைவர்கள்
-கிண்ணியா நிருபர்-
முள்ளிப்பொத்தானை திஸ்ஸபுர இராணுவ முகாம் ஏற்பாடு செய்த தன்சல் வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற சர்வமதத் தலைவர்கள்.
முள்ளிப்பொத்தானை திஸ்ஸ புர இராணுவ முகாம் ஏற்பாடு செய்த வெசாக் தின தன்சல் வழங்கும் நிகழ்வு தம்பலகாமம் பிரதேச சபைக்கு அருகாமையில் உள்ள சந்தை கட்டிட தொகுதியில் இடம்பெற்றது.
இதில் தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி, முள்ளிப்பொத்தானை திஸ்ஸ புர இராணுவ முகாமின் கட்டளையிடும் அதிகாரி லெப்டினன்ட் கர்னல் நளின் மாரசிங்க, தம்பலகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சர்வமதத் தலைவர்கள் உட்பட பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்