தீயில் கருகி உயிரிழந்த பச்சிளம் குழந்தைகள் : வைத்தியர் மற்றும் உரிமையாளர் கைது!

வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் புதிதாக பிறந்த 7 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வைத்தியர் ஒருவர் மற்றும் குறித்த தனியார் வைத்தியசாலையின் உரிமையாளரை இன்று திங்கட்கிழமை கைது செய்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வைத்தியசாலை உரிமம் பெறப்படாத நிலையில் இயங்கி வந்துள்ளதாகவும் வைத்தியசாலையில் அவசரநிலை வெளியேறும் பகுதி உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தியா – டெல்லி விவேக் விஹார் பகுதியில் அமைந்துள்ள குழந்தைகள் நல மருத்துமனையில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் திடீரென தீ விபத்தில் 7 பச்சிளங் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதன்போது தீ விபத்தில் இருந்து மீட்கப்பட்ட 12 குழந்தைகளில் 7 பச்சிளங் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன.

காயமடைந்த குழந்தைகள் மற்றொரு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்