தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல் ஆரம்பம்
2024ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் செயற்பாடு இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவிக்கையில்,
ஜூன் 14ம் திகதி வரை ஒன்லைன் மூலம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்ய, பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://onlineexams.gov.lk/eic இல் உள்நுழையுமாறு விண்ணப்பதாரர்கள் கோரப்பட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்