தூங்கும் போட்டி : ஏராளமான மக்கள் பங்கேற்பு

தென் கொரியாவில் நடத்தப்பட்ட தூங்கும் போட்டியில் ஏராளமான மக்கள் பங்கேற்றுள்ளனர்.

தூக்கத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக குறித்த போட்டி நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது போட்டியில் பங்கேற்றவர்களுக்கு பல்வேறு இடையூறுகள் விளைவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் போட்டியாளர்களின் இதயத்துடிப்பைக் கணக்கிட்டு அதன்படி வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்