புனர்வாழ்வளிக்கப்பட்ட ஒன்றியத்தால் வாழ்வாதார உதவி

-மூதூர் நிருபர்-

புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட நபர்களின் ஒன்றியத்தினால், மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட – பாட்டாளிபுரம் கிராமத்தைச் சேர்ந்த வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 10 குடும்பங்களுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை வாழ்வாதார உதவித் திட்டம் வழங்கி வைக்கப்பட்டது.

அமரர் சண்முகராசா ஜெயக்குமாரின் நினைவாக அவரின் குடும்பத்தினரால் இவ் வாழ்வாதாரத்திற்கான ஆடுகள் வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்கான மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட நபர்களின் ஒன்றியத்தின் தலைவர் கந்தசாமி இன்பராசா, ஊடகப் பேச்சாளர் சுப்ரமணியம் பாலச்சந்திரன், ஒன்றியத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு இவ்வாழ்வாதார உதவித் திட்டத்தை வழங்கி வைத்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்