
பிரதான மார்க்கத்தின் ரயில் சேவைகள் பாதிப்பு
பிரதான மார்க்கத்தின் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
வலக்கும்புர பகுதியில் இன்று ஞாயிற்று கிழமை கணேவத்தையிலிருந்து பாணந்துறை நோக்கிப் பயணித்த தொடருந்து தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளாகியுள்ளமையினால் குறித்த சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக 4 ரயில் சேவைகள் தாமதமடையக்கூடும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
