தாக்குதலுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழப்பு

யாழ். தாவடி பகுதியில் தாக்குதலுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த இளைஞர் நேற்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

தாவடி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 2ஆம் திகதி குறித்த இளைஞரின் தந்தைக்கும், அவரது சகோதரியின் கணவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறிய போது அதனைத் தடுப்பதற்காகச் சென்ற குறித்த இளைஞர் தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்ததை அடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதன்போது அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்