மருத்துவமனையில் தீ விபத்து: 7 குழந்தைகள் பலி

இந்தியாவின் புதுடெல்லி – விவேக் விஹாரில் அமைந்துள்ள குழந்தைகள் பராமரிப்பு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மருத்துவமனையின் மூன்று மாடிக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், இதனால் முழு கட்டடமும் தீப்பிழம்புகளால் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கட்டடத்தின் மேல் தளங்களில் இருந்து 12 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், அதில் 7 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தில் காயமடைந்த ஏனைய குழந்தைகள் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்