
விளையாட்டு திடலில் தீ விபத்து : 12 சிறுவர்கள் உட்பட 24 பேர் பலி
இந்தியாவில் விளையாட்டு திடலில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 சிறுவர்கள் உட்பட 24 பேர் பலியாகியுள்ளனர்.
குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள கேளிக்கை அரங்கில் உள்ள விளையாட்டு திடலில் விடுமுறை நாளான நேற்று சனிக்கிழமை சிறுவர்கள் பெரியவர்கள் உள்ளிட்ட பலரும் கூடியிருந்த வேளை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதில் குழந்தைகள் உள்ளிட்ட 24 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தீ விபத்தில் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் வௌியிடப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
