வைத்தியசாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் மோதலில் ஈடுபட்ட மூவர் கைது

யாழ் போதனா வைத்தியசாலைக்குள் மதுபோதையில் நுழைந்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் மோதலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மூவரும் வைத்தியசாலையில் நோயாளிகளை பார்வையிடும் நேரம் நிறைவடைந்த பின்னர் தம்மை உள்நுழைய அனுமதிக்குமாறு பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் கோரியுள்ளனர்.

எனினும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்தமையினால் இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து வைத்தியசாலை நிர்வாகம் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்த நிலையில் குறித்த மூவரும் கைதாகினர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்