
மரம் முறிந்து விழுந்ததில் பெண் பலி
-பதுளை நிருபர்-
ஹப்புத்தளையில் வீட்டின் மேல் மரம் முறிந்து விழுந்ததில் பெண் உயிர் இழந்துள்ளார்.
பங்கெடிய வைத்தியசாலைக்கு அருகில் வசித்து வந்த 62 வயது பெண்ணே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.
சீரற்ற காலநிலை காரணமாக வீசிய கடும் காற்றினால் வீட்டின் மீது மரம் முறிந்து விழுந்ததில் வீட்டின் சமையல் அறையில் இருந்த பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்ததுடன் மேலும் இருவர் பலத்த காயமடைந்த நிலையில் பங்கெடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக தியத்தலாவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
