வேப்பமரம் முறிந்து விழுந்ததில் மதில் சேதம்!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை வீசிய பலத்த காற்று காரணமாக வீடு ஒன்றின் எல்லையில் கட்டப்பட்டிருந்த மதில் மீது வேப்பமரம் முறிந்து விழுந்ததால் மதில் சேதமாகியுள்ளதாக, யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரித்துள்ளார்.

ஜே/110 திருநெல்வேலி மேற்கு கிராம அலுவலகர் பிரிவில் வசிக்கும் க.அமுதமணி என்பவரது வீட்டின் மதில் மேலே இவ்வாறு வேப்பமரம் முறிந்து விழுந்து மதில் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்